திமுக கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தற்போது எம்பி கல்யாண சுந்தரத்தை கட்சி பதிவிலிருந்து நீக்கியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக செயலாளராக இருக்கும் எம்பி கல்யாணசுந்தரம் கட்சிப்பதவியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
அவருக்கு பதிலாக திரு. சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏவை தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக பொதுச் செயலாளராக நியமித்துள்ளோம். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் அடுத்ததாக தஞ்சைக்கு செல்ல இருக்கிறார்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து எம்பி கல்யாணசுந்தரம் நீக்கப்பட்டுள்ளது கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மேலும் முன்னதாக எம்பி கல்யாணசுந்தரம் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு குறித்து சர்ச்சையாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
