ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில் உள்ள ஒரு மீன் சந்தையில், பட்டப்பகலில் ஒரு இளைஞரை மூன்று பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலு பரிமல் என்ற அந்த இளைஞரை மர்ம கும்பல் மீன் வெட்டும் கத்தியால் சரமாரியாக வெட்டியதோடு மட்டுமல்லாமல், அவர் கீழே விழுந்த பிறகு அவர் மீது காரையும் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இந்த பயங்கரமான தாக்குதலில் படுகாயமடைந்த அவர், தற்போது புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ்  மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.‌‌ முன்விரோதம் காரணமாக இந்த மோதல் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் தாக்குதல் நடத்திய கும்பல் ஆகிய இரு தரப்பினர் மீதும் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது.

“>

 

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பொதுமக்களுக்கு மத்தியில் நடந்த இந்த வன்முறைச் செயல் ஒடிசாவில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.