நிம்மதியான சுற்றுலாப் பயணமாகத் திட்டமிட்டு செர்பியாவிற்குச் சென்ற இந்தியத் தம்பதியினர், அங்கு மர்ம நபர்களால் துன்புறுத்தப்பட்ட சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தம்பதியினர் தங்களது பயணத்தைப் பதிவு செய்துகொண்டிருந்தபோது, மூன்று நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து, அப்பெண்ணின் கைப்பையைப் பறிக்க முயன்றதுடன், அவரைத் தவறான முறையில் தொட்டு அநாகரீகமாக நடந்துகொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

வீடியோவில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்:

அபர்ணா மாலு மற்றும் அஜ்மல் கொலும்பில் என்ற தம்பதியினர் செர்பியாவிற்குச் சென்ற சில மணி நேரங்களிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. படிக்கட்டுகளில் இறங்கிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் பின்தொடர்ந்து வந்து, அபர்ணாவின் பையைப் பறிக்க முயன்றனர்.

முதலில் இது தற்செயலான செயல் என்று நினைத்த தம்பதியினர், பின்னர் அந்த நபர்களின் அநாகரீகமான செய்கைகளை உணர்ந்து அவர்களைக் கடுமையாகக் கண்டித்தனர். தங்களை வீடியோ பதிவு செய்வதைக் கண்ட அந்த நபர்கள், தகாத வார்த்தைகளைப் பேசிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

தம்பதியினரின் விளக்கம்:

வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதும், “ஏன் உங்கள் கணவர் அந்த நபர்களைப் பிடித்துத் தாக்கவில்லை?” என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கமளித்த அபர்ணா, “நாங்கள் செர்பியாவிற்கு வந்து வெறும் இரண்டு மணி நேரம்தான் ஆகிறது.

அந்தச் சூழலில் சண்டையிடுவது எங்கள் பாதுகாப்பிற்கு உகந்ததாக இருக்காது. என் கணவர் எந்த ஒரு அதிரடிப் பட ஹீரோவும் இல்லை. அந்தச் சூழ்நிலையில் உயிருக்கு ஆபத்து வராமல் பாதுகாப்பாக வெளியேறுவதே எங்களின் முதல் முன்னுரிமையாக இருந்தது” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

அவர்கள் இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இணையத்தின் கொந்தளிப்பு:

சுற்றுலாப் பயணிகளுக்கு, குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடாகச் செர்பியா மாறியுள்ளதா என்ற கேள்வியை இந்த வீடியோ எழுப்பியுள்ளது. செர்பிய காவல் துறையின் அதிகாரப்பூர்வ பக்கங்களை டேக்  செய்த நெட்டிசன்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவா பாதுகாப்பு? என்று காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aparna Malu (@aparnamalu.krishnan)

“>

அதே சமயம், இக்கட்டான சூழலில் பதற்றமடையாமல் சாதுர்யமாகச் செயல்பட்ட தம்பதியினருக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.