புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி அனல் பறந்து வரும் நிலையில், அங்கு ஒரு எதிர்பாராத “ஷாக்” ரிசல்ட் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெற முடியாமல் திணறி வருகிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலை வகித்து பாரம்பரியக் கட்சிகளின் ஆதிக்கத்தை உறுதி செய்துள்ளன.

தவெக-வின் அரசியல் வருகை புதுச்சேரியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தபால் வாக்குகள் தந்த இந்த ஆரம்பகட்ட பின்னடைவு அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.