தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மெகா திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திமுகவின் மூத்த தலைவரும், அமைச்சருமான துரைமுருகன் ஆரம்பகட்ட தபால் வாக்கு எண்ணிக்கையிலேயே 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்து அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளார். தபால் வாக்குகளில் அதிமுக வேட்பாளர் ராமு 328 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்க, துரைமுருகன் வெறும் 210 வாக்குகளை மட்டுமே பெற்று இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பல தசாப்தங்களாகத் தனது கோட்டையாகக் காட்பாடியை வைத்திருக்கும் துரைமுருகனுக்கு, ஆரம்பத்திலேயே ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு திமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிமுக கூடாரத்தில் பலத்த உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
