மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள சண்டாக்கான், கம்பங் பஹாகியா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த கோரத் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. மரப்பலகைகளால் கட்டப்பட்ட வீடுகள் நெருக்கமாக இருந்ததால், தீ மிக வேகமாகப் பரவி ஒட்டுமொத்த குடியிருப்புப் பகுதியையும் சூழ்ந்துகொண்டது.

மேலும் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. இந்தத் தீ விபத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

“>

இதனால் தீ விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உணவு, உடை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. மனிதாபிமான அடிப்படையில் பல தரப்பிலிருந்தும் இந்தப் பகுதி மக்களுக்கு உதவிகள் குவிந்து வருகின்றன.