ஈரானில் அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் சூழல் குறித்து அமெரிக்கா விடுத்த கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, அங்கு திட்டமிடப்பட்டிருந்த 800 மரணதண்டனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஈரானிய அதிகாரிகளுக்கு நேரடியாக விடுத்த எச்சரிக்கையில், போராட்டக்காரர்கள் மீதான கொலைகள் தொடர்ந்தால் “கடுமையான விளைவுகளை” சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ‘உதவி விரைவில் வரும்’ என்று டிரம்ப் உறுதியளித்த நிலையில், தற்போது மரணதண்டனைகள் நிறுத்தப்பட்டிருப்பதை அமெரிக்கா ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகப் பார்க்கிறது. இருப்பினும், ஈரானின் இந்த நடவடிக்கை தற்காலிகமானதா என்பதை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது.

இதனால் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் இது குறித்துக் கூறுகையில், ஈரானில் நிலைமையை அதிபர் டிரம்ப் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், போராட்டக்காரர்கள் மீதான வன்முறை மீண்டும் தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில் உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் பரிசீலனையில் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார். ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவின் இந்தத் தலையீடு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.