தமிழ்நாட்டில் காரைக்குடியில் பிரசாரத்திற்காக ஹெலிகாப்டர் மூலம் வந்த நடிகர் விஜய், பிரசார வாகனத்தில் செல்லும் போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது.

அவரது பிரசார வாகனத்தை கடந்து சென்ற தொண்டர்கள், உற்சாகத்தில் வாகனத்தின் முன்புற கண்ணாடியின் மீது பால் பீச்சி அடித்தனர்.

இதனால் வாகனத்தின் விண்ட்ஷீல்டு முழுவதும் பால் திரவம் படிந்து பார்வை மறைக்கப்பட்டது. இதனால் வாகனம் தடுமாறிய நிலையில், யாரும் வழி தெரியாமல் சிரமப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.