தற்போது சமூக ஊடகங்களில் ஒரு மனதை உருக்கும் காணொளி வைரலாகி வருகிறது. வெறும் 500 ரூபாய் கட்டணம் செலுத்த முடியாததால், 15 நாட்கள் பள்ளிக்குச் செல்லத் தவறிய ஒரு ஏழை மாணவியின் கதையை இது விவரிக்கிறது. குடும்பத்தின் மோசமான நிதிநிலை காரணமாக இனி பள்ளிக்குச் செல்லவே முடியாது என அந்தப் பெண் பயந்தாள். அதனால், பள்ளிக்குச் செல்லாமல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள். இந்தக் காட்சியைக் கண்ட மில்லியன் கணக்கானவர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்துள்ளது.
அந்த மாணவி பள்ளிக்கு வராததைக் கண்டு கவலைப்பட்ட பள்ளி முதல்வர், முதலில் அவள் வீட்டிற்குச் சென்று விசாரிக்கிறார். வீட்டில் வேறுவழியில்லாததால் அவள் தன் குடும்பத்திற்கு உதவியாக வயலில் வேலை செய்வதை அறிந்து கொள்கிறார். சிறிதும் தாமதிக்காமல், முதல்வர் வயல்களுக்குச் சென்று, சேற்றில் உழன்றபடி வேலை செய்து கொண்டிருந்த அந்த மாணவியைக் கண்டுபிடிக்கிறார்.
Principal reaches the field after Girl misses 15 days of School due to ₹500 fee shortage,
Asked her to rejoin the school
pic.twitter.com/hVbuLnGewR— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 10, 2025
“>
உடனே அவளை அழைத்து, ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று அன்புடன் கேட்டறிகிறார். இது மனிதநேயத்தின் உண்மையான அர்த்தத்தையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.
