திருமண மேடையில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மணமகள், மணமகனுக்கு மாலை அணிவிக்கத் தயாராக இருந்த நேரத்தில், மணமகளின் முன்னாள் காதலன் திடீரென மேடைக்கு வந்து, காதலியின் முன் முழங்காலிட்டு நின்றார். தன் காதலனைப் பார்த்த மணமகளும் உணர்ச்சிவசப்பட்டு, அதே இடத்தில் அமர்ந்து கண்கலங்கினார்.

இந்த உணர்ச்சிப் போராட்டத்தைக் கண்ட மணமகளின் தந்தையின் மனம் உருகியது. தாமதிக்காமல், தந்தையானவர் தன் மகளின் கரத்தை, மேடைக்கு வந்த அந்தக் காதலனின் கையில் பிடித்துக் கொடுத்தார். இந்தத் திருப்பத்தால், திருமணத்துக்காக வந்த மணமகன் அருகில் நின்று இதைப் பார்க்க வேண்டியதாயிற்று. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சிலர், “அவசரப்பட்டு திருமண ஏற்பாடு செய்திருக்கக் கூடாது” என்று விமர்சித்தாலும், பலர் “மகளின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த தந்தையின் துணிச்சலான செயலுக்கு ஒரு சலாம்” என்று பாராட்டி வருகின்றனர். எது எப்படியிருந்தாலும், அன்பு வென்ற இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.