சீனாவின் ‘யுனிட்ரீ’நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு எவரெஸ்ட் சிகரத்தின் மலையேற்றப் பயிற்சி முதல் சீன வசந்தகால விழா வரை பல்வேறு சாதனைகளைச் செய்து வந்த மனிதவடிவ ரோபோக்கள் தற்போது சீனத் தெரு ஒன்றில் கைகூப்பி மண்டியிட்டுப் பிச்சை எடுப்பது போன்ற வீடியோ வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வைரல் வீடியோவில், ரோபோ ஒன்று தனது ‘கரண்ட் பில்’ கட்ட உதவுமாறு எல்இடி போர்டு மற்றும் ஸ்பீக்கர் மூலம் பிச்சை எடுப்பதுடன், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்காக அதன் முன்னால் ஒரு க்யூஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது.

இந்த விசித்திரமான காட்சியைக் கண்ட நெட்டிசன்கள் பலரும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று அஞ்சிய வேளையில், தற்போது ரோபோக்களுக்கே வேலை இல்லாமல் “பெக்கர்-பாட்” ஆக மாறிவிட்டதாகக் கேலி செய்து வருவதுடன், தற்போதைய பொருளாதாரச் சூழலில் ரோபோக்களால் கூட பிழைக்க முடியவில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஒருபுறம் இந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தால் மனிதர்களுக்கு ஏற்படும் வேலைவாய்ப்பற்ற எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மற்றொரு புறம் யுனிட்ரீ நிறுவனம் உலகளாவிய ரோபோட்டிக்ஸ் சந்தையை ஆளப்போவதாக ஏஐ நிபுணர் மேட் ஒயிட் கணித்துள்ளார்.

 

<a href=”http://

“>

இருப்பினும், கடந்த மார்ச் மாதத்தில் சீனத் தெருவில் முதியவர் ஒருவரை மிரட்டியதற்காக இந்த ரோபோ போலீசாரால் கைது செய்யப்பட்டதும், மற்றொரு பொது நிகழ்ச்சியில் தவறுதலாக ஒரு குழந்தையின் வயிற்றில் உதைத்ததும், சமநிலை தவறி விழுந்தபோது அதன் கைகால்களின் கடுமையான அசைவுகளால் ஒருவரின் மூக்கில் காயம் ஏற்பட்டதும் போன்ற பல்வேறு சர்ச்சைகளிலும் இந்த ரோபோக்கள் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.