பிரேசில் நாட்டில் உள்ள ஒரு கடையில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையன் ஒருவன், அங்கிருந்த காசாளரை மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நபர் கடையில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென தனது துப்பாக்கியை வெளியே எடுத்தார்.
இதனால் அங்கிருந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் சில நொடிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இருப்பினும், அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஆபத்தை உணர்ந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் கடைக்குள் புகுந்தனர்.
Watch: Man Pulls Gun For Store Robbery, But Police Enter Instantly; Failed Plan Goes Viral https://t.co/jpDYMNacis
— Rajeshwarirajii Rajii (@Rajeshwari66464) June 17, 2026
“>நெட்டிசன்கள் நக்கல்
இந்நிலையில் கொள்ளையன் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவதற்குள், அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து, உடனடியாக அவனைக் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சில நொடிகளிலேயே காவல்துறையினரின் இந்த துரிதமான செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, யாருக்கும் எந்தவித காயமும் இன்றி அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
