மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய சென்னை மேயர் பிரியா, தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் அக்கட்சியையும், அதன் தலைமையிலான புதிய அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேடையில் பேசிய அவர், “நாங்கள் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று கவர்ச்சியான மற்றும் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து இன்றைக்கு ஒரு கூட்டம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அது யார் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

எனக்கு முன்னால் பேசிய அண்ணன் பிரபாகரன் கூட இவர்களை ‘தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்’ என்று சொன்னார். அது முற்றிலும் உண்மைதான். வெறும் கவர்ச்சியை வைத்துதானே நீங்கள் வெற்றி பெற்றீர்கள், அதைத்தவிர வேறு என்ன ஃபீல்டு வொர்க்  நீங்கள் செய்திருக்கிறீர்கள்?” என்று அதிரடியாகக் கேள்வி எழுப்பினார்.

இப்போதுதான் அவர்கள் முதன்முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்; அவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள், அவர்களது தலைவர் தான் முதலமைச்சராக இருக்கிறார், அவர்களது அமைச்சர்கள்தான் துறைகளை வைத்திருக்கிறார்கள் என்று கூடத் தெரியாமல், இன்றைக்கும் எல்லாவற்றுக்கும் திமுகதான் காரணம், திமுகதான் காரணம் என்று பழி போடுகிறார்கள். எந்தவொரு பொறுப்பையும், கடமை உணர்வையும் ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

 

இத்தனை நாட்களாகியும் அவர்களது சட்டமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ யாருமே பொறுப்பை எடுத்துக் கொள்வதில்லை; இப்படித்தான் இவர்களின் ஆட்சி இருக்கிறது. இன்று விர்ச்சுவேல் வாரியர்ஸ் என்று கூறுகிறார்கள். அந்தக் கட்சியின் தலைவர் கூட எங்க விர்ச்சுவல் வாரியர் தான் எங்களுக்கு எல்லாம் என்கிறார்.மேலும்  நான் இப்போது கேட்கிறேன் விர்ச்சுவல் வாரியர்ஸ்களே உங்களுக்கு மண்டையில் ஏதாவது இருக்கா. ஒரு கண்டன்ட் போடுவதற்கு முன்பு அதை முன் அதை உண்மையா பொய்யா என்று கூட தெரிந்து கொள்ள மாட்டீர்களா. இந்த விர்ச்சுவல் வாரியர்சை வைத்து ஏதோ படம் எடுப்பது போல் எடுக்கிறார்கள் இது ஒன்றும் சினிமா கிடையாது மூன்று மணி நேரம் படம் பார்த்துவிட்டு வெளியே வந்து ரிவ்யூ சொல்வதற்கு என்று கூறினார்.