சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு விசித்திரமான வீடியோ மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ரயிலின் மேல் படுக்கையில் இருந்த ஒரு சிறுவன், கீழ் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பயணி மீது மலம் கழித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் செயலால் ஆத்திரமடைந்த அந்தப் பயணியும், சிறுவனின் குடும்பத்தினரும் ரயிலுக்குள் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபடுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த வீடியோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் இதைக் கண்டு முகம் சுளித்தாலும், வேறு சிலர் வேடிக்கையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

“>

 

“இது ஒரு புதிய பயத்தை உண்டாக்கியுள்ளது” என்றும், “மேல் படுக்கையில் இருந்து வந்த எதிர்பாராத பரிசு” என்றும் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். எப்படியிருந்தாலும், பொது இடங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.