சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, ரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு விசித்திரமான மற்றும் உணர்ச்சிகரமான மோதலைக் காட்டுகிறது. அந்த வீடியோவில், ஒரு காதலனும் காதலியும் ரயிலுக்காகக் காத்திருக்கும்போது அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், தனது காலணியைக் கழற்றித் தனது தலையிலேயே அடித்துக்கொள்ளத் தொடங்குகிறான். “என்னை அடி… ஏன் என்னை அடிக்க மாட்டேங்கிற?” என்று கத்திக்கொண்டே அவன் செய்த செயல், அங்கிருந்த பயணிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தன் காதலனின் இந்த விபரீதச் செயலைக் கண்டு பதறிப்போன அந்தப் பெண், உடனே அவனைத் தடுத்து அமைதிப்படுத்த முயல்கிறார். சிறிது நேரத்தில் கோபம் தணிந்த அந்த இளைஞன், தன் காதலியின் முன்னால் கைகளைக் கூப்பி மன்னிப்புக் கேட்கும் உருக்கமான காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
Kalesh b/w a Couple at Railway Station pic.twitter.com/cd41ftsYv0
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 7, 2026
“>
‘Ghar ke kalesh’ என்ற எக்ஸ் (X) பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இது ஒரு வகையான மன ரீதியான பாதிப்பு” என்றும், “காதலில் விழுந்தால் நிலைமை இப்படித்தான் ஆகும்” என்றும் விதவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
