சமூக வலைதளங்களில் தற்போது ஒரு ஆட்டோ ரிக்ஷாவின் வீடியோ வைரலாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அந்த ஆட்டோ பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், அதன் உள்ளே பயணிகள் அமரும் இடத்திற்கு முன்பாக ஒரு பெரிய பலகை பொருத்தப்பட்டுள்ளது.
அதில் விதவிதமான கம்மல்கள், கழுத்து மாலைகள் மற்றும் ஜும்காக்கள் போன்ற நகைகள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் தங்களுக்குப் பிடித்த நகைகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவதற்கு ஏதுவாக கவர்களும் அங்கே வைக்கப்பட்டுள்ளன.
ஆட்டோ ஓட்டுநரின் இந்த வினோதமான மற்றும் ஆக்கப்பூர்வமான வணிக யோசனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த இணையதளவாசிகள், “இது ஒரு புத்திசாலித்தனமான பக்கவாட்டுத் தொழில் என்று பாராட்டி வருகின்றனர்.
இதன் மூலம் ஆட்டோ ஓட்டுநர் சவாரி கட்டணம் மட்டுமன்றி, நகைகள் விற்பனை மூலமும் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும். “நிச்சயமாக இது அவரது மனைவியின் தொழிலுக்கு அவர் செய்யும் உதவியாக இருக்கும்” என்றும், “கடின உழைப்பும் படைப்பாற்றலும் இணைந்த முயற்சி” என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
அதே சமயம், பாதுகாப்பு கருதி “யாராவது நகைகளைத் திருடிச் சென்றால் என்ன செய்வது?” என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர்.
