பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள சம்பா நகரில் நடந்த உருக்கமான நெகிழ்ச்சிச் சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு தனது புகுந்த வீட்டிற்குச் செல்லும் சகோதரியின் விடைபெறும் நிகழ்வின் போது, அவருடன் செல்ல காரில் இடம் கிடைக்காததால், அவரது தம்பி சுமார் 70 கிலோமீட்டர் தூரம் மிதிவண்டியிலேயே பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

பீகார் கலாச்சாரப்படி ‘லோக்னா’ என்ற சடங்கிற்காக மணமகளின் சகோதரன் மணமகன் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அந்த பாசமான தம்பி, தனது அக்காவிடமிருந்து பிரிய மனமில்லாமல் விடாமுயற்சியுடன் சைக்கிளை மிதித்துச் சென்றக் காட்சி பார்ப்போரின் கண்களைக் குளமாக்கியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இணையதளவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “இப்படி ஒரு தம்பி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்றும், “இதுதான் உண்மையான உடன்பிறப்பு பாசம்” என்றும் பலர் பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by S.K. Supriya (@sushant_supriya)

“>

அதே சமயம், ஒரு சிறுவனுக்குக் கூட காரில் இடம் கொடுக்காமல் இருந்த மணமகன் வீட்டாரையும், அந்த குடும்பத்தின் பொறுப்பற்ற தன்மையையும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

எதுவாக இருந்தாலும், அந்த சிறுவனின் இந்தச் செயல் அக்கா-தம்பி இடையேயான தூய்மையான அன்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.