எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா, செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். “மக்களை எத்தனை காலம்தான் தமிழ், திராவிடம் என்று சொல்லி ஏமாற்றுவீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் வருவதால்தான் இப்போது திமுகவுக்குப் பொங்கல் பரிசும், விலைவாசி உயர்வும் நினைவுக்கு வருகிறது என்று குற்றம் சாட்டினார். குறிப்பாக, “கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரியே இல்லை என திமுக நினைக்கிறது… ஆனால் நான் ஒருத்தி இருப்பதையே அவர்கள் மறந்துவிட்டார்கள்” என்று அவர் கொடுத்த ‘பஞ்ச்’ அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது

​தமிழக அரசின் புதிய திட்டமான ‘உங்கள் கனவுகளைச் சொல்லுங்கள்’ என்பதன் பின்னணியில் ஒரு பெரிய சூட்சமம் இருப்பதாகச் சசிகலா போட்டு உடைத்துள்ளார். “மக்கள் என்ன நினைக்கிறார்கள், நமக்கு வாக்களிப்பார்களா என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் இந்தத் திட்டமே தவிர, மக்களின் கனவுகளை நனவாக்க அல்ல” என்று அவர் அதிரடியாகக் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் காலத்தில் கொண்டுவரப்பட்ட சத்துணவு மற்றும் ரேஷன் திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், திமுக எப்போதுமே சொன்னதைச் செய்தது இல்லை என்றும், ஆட்சியைத் தக்கவைக்கவே மக்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் காரசாரமாகப் பேசியுள்ளார்!