கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் பயணம் செய்த ஒரு வட மாநில வாலிபர் பொதுமக்கள் முன்னிலையில் மது அருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் எச்சரித்தும், வட மாநில வாலிபர் அதனை கண்டு கொள்ளாமல் மது குடித்துள்ளார். அங்கிருந்த பயணி ஒருவர் அதை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டார்.
அந்த வீடியோ வைரலாகியதால் நெட்டிசன்கள் வட மாநில வாலிபரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் பயணம் செய்யும் ரயில்களில் அநாகரிகமான முறையில் நடக்கும் சம்பவங்களை தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
