இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடுகள் மற்றும் தலித் மக்கள் மீதான வன்முறைகள் குறித்து ஒரு பெண் ஆவேசமாகப் பேசும் வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் தீயாய் பரவி வருகிறது. “இந்தியாவில் சாதி மறுப்பு காதல் என்பது குற்றமாகப் பார்க்கப்படுகிறது; ஆனால் பாலியல் வன்முறை மற்றும் ஆசிட் வீச்சு போன்ற கொடூரங்கள் இங்கே சாதாரணமாகக் கடந்து செல்லப்படுகின்றன” என்று அந்தப் பெண் அந்த வீடியோவில் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

​தலித் மக்களால் உங்களைப் போலத் தாழ்ந்து போய் சிந்திக்க முடியாது என்று கூறியுள்ள அவர், “எங்கள் தீண்டல் உங்களைத் தீட்டுப்படுத்தும் என்றால், நீங்கள் இந்த நாட்டை விட்டோ அல்லது இந்த பூமியை விட்டோ வெளியேறுங்கள்” என்று ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியக் கொடுமைகளை எதிர்த்து இந்தப் பெண் பேசியுள்ள துணிச்சலான பேச்சு, இணையத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது