ரேஷன் கடையில் வழங்கப்படும் புடவைகள் தரம் குறைந்தவை என்று எகத்தாளம் பேசுபவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு சுவாரசியமான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு பெண் ரேஷன் கடையில் கொடுத்த சாதாரணப் புடவையைத் தனது ரசனைக்கேற்ப மிக அழகாகவும், ஸ்டைலாகவும் கட்டி அசத்தியுள்ளார்.
ரேஷன் புடவையை யார் கட்டுவாங்கனு ஒரு தற்குறி கேட்டுச்சு
இங்க பார் வித விதமா இருக்கு 😍 pic.twitter.com/SaWGbktOuL— Dravida ponnu (@Dravida_ponnu) January 13, 2026
”இந்தக் காலத்துல ரேஷன் புடவையை யார் கட்டுவாங்க?” என்று கிண்டல் செய்தவர்களுக்குப் பதிலடி தரும் விதமாக, அந்தப் பெண் விதவிதமான ஸ்டைலில் புடவையைக் கட்டி ஒரு ‘பேஷன் ஷோ’வே நடத்தியுள்ளார். சாதாரணப் புடவையைக்கூட நேர்த்தியாகக் கட்டினால் எவ்வளவு ராயலாக இருக்கும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டிய விதம் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. “பொருள் முக்கியமல்ல, அதைப் பயன்படுத்தும் விதமே அழகு” என்பதை இந்தப் பதிவு உரக்கச் சொல்கிறது.
