முதலைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் சிலர் வேண்டுமென்றே அவற்றிடம் வம்பு செய்து ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இரண்டு நபர்கள் ஒரு பெரிய முதலையைத் தடியால் சீண்டி விளையாடுகிறார்கள்.

தரையில் அமைதியாகப் படுத்துக் கொண்டிருந்த அந்த முதலை, தன்னைத் தொந்தரவு செய்ததைக் கண்டு ஆவேசமடைந்து, அவர்களைத் தாக்க வேகமாகப் பாய்ந்தது. சீண்டிய நபர் தப்பித்து ஓட, அவருடன் இருந்த மற்றொருவர் முதலையிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகள் பார்ப்பவர்களைப் பதற வைக்கின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Mike Holston (@therealtarzann)

“>

இந்த வீடியோ ‘இன்ஸ்டாகிராம்’ தளத்தில் பகிரப்பட்டு, இதுவரை 39 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. முதலையின் பிரம்மாண்ட அளவையும் அதன் வேகத்தையும் பார்த்த நெட்டிசன்கள், “அந்த முதலை வாலை ஒருமுறை சுழற்றியிருந்தால் நிலைமையே மாறியிருக்கும்” எனப் பலவாறாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விலங்குகளிடம் இது போன்ற விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.