விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாகச் சந்தித்த மாறுபட்ட கொள்கை கொண்ட நான்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எடுத்த செல்பி, தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் (X) பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘முறுவலிக்கும் முரண்கள்’ என்று கவித்துவமாகத் தலைப்பிட்டுள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கொள்கை ரீதியாக வேறுபட்டு நிற்கும் தலைவர்கள் இப்படிப் புன்னகையோடு காட்சியளிப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சற்று முன் திருச்சி விமான நிலையத்தில்..
'முறுவலிக்கும் முரண்கள்' .அண்ணன் திருச்சி சிவா எடுத்த 'செல்ஃபி'. pic.twitter.com/rm0kQinPUG
— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 18, 2026
அரசியல் மேடைகளில் ஒருவரையொருவர் காரசாரமாக விமர்சித்துக்கொண்டாலும், பொதுவெளியில் இவர்கள் காட்டும் இந்த நாகரீகமான உறவு நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. “தேர்தல் நெருங்கும் வேளையில், ஒருவேளை இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் எப்படி இருக்கும்?” என்று சிலர் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட, “இது வெறும் நாகரீகச் சந்திப்பு தான், இதிலெல்லாம் அரசியல் தேட வேண்டாம்” எனப் பதிவிட்டு வருகின்றனர். எது எப்படியோ, திருமாவின் அந்த ‘முறுவலிக்கும் முரண்கள்’ பதிவு இப்போது இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகிறது!
