உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம், உஜ்ஹானி காவல் எல்லைக்குட்பட்ட சிர்சௌலி கிராமத்தில் பயிர்களைச் சேதப்படுத்தி வந்த காட்டுப்பன்றியைப் பிடிக்க முயன்ற வனத்துறை அதிகாரி மீது அந்த விலங்கு கொடூரத் தாக்குதல் நடத்தியது.

கடந்த சில நாட்களாகக் காட்டுப்பன்றியின் அட்டூழியத்தால் விளைநிலங்கள் சேதமடைந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் விடுத்த புகாரை அடுத்து, வனச்சரக அதிகாரி சுபம் பிரதாப் சிங் தலைமையிலான மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காட்டுப்பன்றியை வலையிட்டுப் பிடிக்க வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சியின் போது, ஆவேசமடைந்த அந்த விலங்கு திடீரென அதிகாரி சுபம் பிரதாப் சிங்கை நோக்கிப் பாய்ந்து அவரை நிலைகுலையச் செய்தது.

வனச்சரக அதிகாரியைத் தள்ளிவிட்டு அவர் மீது ஏறி நின்றபடி, சுமார் இரண்டு நிமிடங்களுக்கும் மேலாகக் காட்டுப்பன்றி வெறித்தனமாகத் தாக்கியது. சக ஊழியர்கள் கையில் வைத்திருந்த தடியால் விலங்கைத் தாக்கியும், சத்தமிட்டும் விரட்ட முயன்றனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, சக ஊழியர்களின் விடாப்பிடியான முயற்சியால் காட்டுப்பன்றி அங்கிருந்து பின்வாங்கியது.
<a href=”http://

“>
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அதிகாரி சுபம் பிரதாப் சிங், உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வனத்துறை ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தான நிலையில் பணிபுரியும் சூழலை உணர்த்தும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.