ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள பிபிஎம் (PBM) மருத்துவமனையில், சிசேரியன் (C-section) பிரசவம் செய்துகொண்ட 6 பெண்களுக்கு அடுத்தடுத்து திடீரென சிறுநீரக செயலிழப்பு (Kidney Failure) ஏற்பட்டு, அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) டயாலிசிஸ் செய்யப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய வந்த ராஜஸ்தான் மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் கிம்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “பிரசவம் முடிந்த இரண்டே மூன்று மணி நேரத்தில் பெண்களுக்கு எப்படி உடல்நிலை மோசமடைந்தது?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் அளித்த திமிரான பதில் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேள்வியால் ஆத்திரமடைந்த அமைச்சர், அங்கிருந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேந்திர வர்மாவை நோக்கி, “அவங்க ஹாஸ்பிட்டலுக்கு வரும்போது என்ன டான்ஸ் ஆடிக்கிட்டா வந்தாங்க? இல்ல ஏற்கனவே உடம்பு முடியாம வந்தாங்களான்னு நீங்களே சொல்லுங்க” என்று மிகவும் திமிராகவும் அநாகரிகமாகவும் பேசியுள்ளார்.
மேலும் மருத்துவர்களைக் காப்பாற்றும் நோக்கில், “நாங்க எத்தனையோ உயிர்களைக் காப்பாத்துறோம், அதை நீங்க சொல்றதே இல்ல. 1000 பேர்ல ரெண்டு பேர் செத்தா அதை பெருசு படுத்துறீங்க” என்று எமோஷன் இல்லாமல் பேசியுள்ளார். கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடுதான் இதற்கு காரணம் என்றும் அவர் மழுப்பியுள்ளார்.
"गर्भवती महिला कैसे आई थी?
क्या नाचते हुए आई थी।"
– बीकानेर के पीबीएम अस्पताल में प्रसूताओं की किडनी प्रभावित होने के मामले में स्वास्थ्य मंत्री गजेन्द्र सिंह खींवसर का सवाल।
राजस्थान की आठ करोड़ जनता को इस बार जिस तरह के मंत्री मिले हैं वह मिसाल है प्रदेश के इतिहास में।… pic.twitter.com/7W7uJLd1Li
— Mukesh Mathur (@mukesh1275) June 11, 2026
அமைச்சரின் இந்த கொடூரமான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் சரிகா சவுத்ரி, “பெண்களை இழிவுபடுத்திய சுகாதார அமைச்சர் ஒட்டுமொத்த ராஜஸ்தான் பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கொதித்தெழுந்துள்ளார். இந்த பரபரப்பான வீடியோ மற்றும் செய்தி தற்போது சோசியல் மீடியாவில் அல்காரிதத்தை அதிரவைத்து, காட்டுத்தீயாய் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
