தமிழகத்தில் முதல்வர் விஜய் அவர்களால் பெண்களின் பாதுகாப்பிற்காகப் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை குறித்துப் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் அவர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களையும் எச்சரிக்கையையும் முன்வைத்துள்ளது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
முதல்வர் அவர்களே நீங்கள் ஆரம்பித்து வைத்த ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை ஏதோ தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது என்று மக்கள் நினைத்ததாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். ஆனால், வழக்கம்போலக் காவல்துறை தன் கடமையைச் செய்வது போலவே இயங்குவதற்கு எதற்காகச் ‘சிறப்புப்படை’ என்ற ஆடம்பரப் பெயர் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை அருகே ஆயுதப்படை பெண் காவலர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. முதல்வர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் அதிரடிப்படை வந்து விட்டது இனி பெண்கள் நிம்மதியாக இருக்கலாம் என்ற நினைப்பை தவிடு பொடியாக்கும் வகையில் கடந்த…
— Vanathi Srinivasan (@VanathiBJP) June 13, 2026
மேலும், தமிழ்நாட்டுப் பெண்களுக்குத் தொடர்ச்சியாகத் தலைகுனிவை ஏற்படுத்தும் இதுபோன்ற பாலியல் மற்றும் அத்துமீறல் சம்பவங்கள் மாநிலத்தில் நீடித்தால், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு சீக்கிரமே ‘தோல்வி கழக அரசாக’ மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.
இனியாவது வெறும் விளம்பரமாக இல்லாமல் தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பினைத் தவெக அரசு முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் கறாரான கோரிக்கை விடுத்துள்ள விபரம் தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
