உத்தரப் பிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில், கள்ளக்காதலனுடன் தவறான உறவில் இருந்ததை நேரில் பார்த்துக் கண்டித்த தனது சொந்தக் கணவன் தூங்கிக் கொண்டிருந்த போது, அவர் மீது வாலி நிறைய அசிட்டை (Acid Attack) ஊற்றிப் பழிவாங்கிய கொடூர மனைவி ககஷா (Kahkasha) என்பவருக்கு நீதிமன்றம் தற்பொழுது அதிரடியாக ஆயுள் தண்டனை மற்றும் 1,75,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது.

முசாபர் அலி (Muzaffar Ali) என்பவரும் ககஷாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணத்திற்குப் பிறகு அண்டை வீட்டு இளைஞர் ஒருவருடன் ககஷாவுக்குக் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2025 மார்ச் 7 அன்று தனது மனைவியைக் கள்ளக்காதலனுடன் ஆபாசமான நிலையில் கையும் களவுமாகப் பிடித்த முசாபர் அதனைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ககஷா, முசாபர் அலி இரவில் அசைந்து தூங்கிக் கொண்டிருந்த சமயம் பார்த்து அவர் மீது வாலி நிறைய அசிட்டை ஊற்றிக் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த விபரீத அசிட் வீச்சில் முசாபரின் முகம் மற்றும் உடல் 60 சதவீதம் மிகக் கொடூரமாகக் கருகியதோடு, டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் 6 மாதங்கள் உயிருக்குப் போராடி உயிர் பிழைத்த போதிலும் அவரது இரண்டு கண்களின் பார்வையும் நிரந்தரமாகப் பறிபோனது.

உயர் நீதிமன்றத்தின் தொடர் கண்காணிப்பு மற்றும் சம்பல் போலீசாரின் தீவிர முயற்சியால், இந்த வழக்கை விசாரித்த அதிவேக நீதிமன்ற (Fast Track Court) நீதிபதி கோபால் அவர்கள், குற்றவாளியான மனைவி ககஷாவுக்குத் தற்பொழுது ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

தீர்ப்பைக் கேட்டவுடன் நீதிமன்றத்திலேயே ககஷா கண்ணீர் விட்டு கதறி அழுத நிலையில், தொற்றுகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு தனது தாயாரின் உதவியுடன் நீதிமன்றத்திற்கு வந்து நீதியைப் பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளியான கணவன் முசாபரின் இந்த உருக்கமான செய்தி தற்பொழுது நெட்டிசன்கள் மத்தியில் சோசியல் மீடியாவில்  ட்ரெண்டாகி வருகிறது.