தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பி.வி. நரசிம்ம ராவ் அதிவேக நெடுஞ்சாலையில், அதிவேகமாகச் சென்ற காரிலிருந்து மர்ம நபர் ஒருவர் வானவேடிக்கை பட்டாசுகளை வெடிக்கச் செய்த அதிர்ச்சியூட்டும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TG 11 A 9177 என்ற பதிவு எண் கொண்ட அந்த காரின் ஜன்னல் வழியாக வெளியே சாய்ந்தபடி, அந்த நபர் தொடர்ச்சியாக ‘ஸ்கை ஷாட்’ ரக பட்டாசுகளைப் பற்றவைத்துள்ளார்.

கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்த போதே சிதறிய நெருப்புப் பொறிகள் மற்ற வாகனங்களின் மீது விழும் அபாயம் இருந்ததோடு, அங்கு பயணித்த இதர வாகன ஓட்டிகளையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது. சக வாகன ஓட்டி ஒருவரால் படம்பிடிக்கப்பட்ட இந்த அத்துமீறல் குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்த கார் உரிமையாளர் மற்றும் நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
<a href=”http://

“>
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காரின் பதிவு எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.