புடவை அணிந்துகொண்டு சாதாரண பைக் ஓட்டுவதே கடினம் என்று சொல்பவர்களுக்கு மத்தியில், ஒரு இளம்பெண் ஸ்போர்ட்ஸ் பைக்கில் செய்த சாகசம் இணையத்தையே அதிர வைத்துள்ளது.
கருப்பு நிற முகமூடி மற்றும் புடவை அணிந்திருந்த அந்தப் பெண், அதிவேகமாகச் செல்லும் பைக்கில் முதலில் ஒரு கையை விட்டு ஓட்டுகிறார்.
பின்னர், துளியும் அச்சமின்றி இரண்டு கைகளையும் விட்டுவிட்டு, பின்னால் திரும்பிப் பார்த்தபடி அவர் செய்த சாகசம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
साड़ी में बाइक नहीं चलती.
ये सुनकर मुस्कुरा लिया 😊
क्योंकि हौसले को किसी ड्रेस-कोड की ज़रूरत नहीं होती।😉 pic.twitter.com/dp6iZOlYjU— Aalia Nadim (@aalianadim) December 26, 2025
ஒரு சிறிய தடுமாற்றம் ஏற்பட்டிருந்தால் கூட பெரிய விபத்து நேர்ந்திருக்கும், ஆனால் அவரது அசாத்தியமான தன்னம்பிக்கை அந்தச் சாகசத்தை மிக எளிதாகச் செய்ய வைத்துள்ளது.
சுமார் 15 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ, எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. “சாதிக்கத் துணிந்தவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு ஒரு தடையே இல்லை” என்பதை இந்தப் பெண் நிரூபித்துவிட்டதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“புடவை அணிந்திருந்தாலும் தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்” என நெட்டிசன்கள் இந்தப் பெண்ணின் திறமையைக் கொண்டாடி வருகின்றனர்.
அதே சமயம், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றிச் சாலையில் இது போன்ற சாகசங்களைச் செய்வது மிகவும் ஆபத்தானது என்ற எச்சரிக்கையையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.
