மும்பையின் அந்தேரி பகுதியில் ரகசியமாக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், பால் கலப்படத்தில் ஈடுபட்டு வந்த ஒரு மிகப்பெரிய கும்பல் பிடிபட்டுள்ளது. இந்தக் கும்பல் பிரபலமான நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளைத் திறந்து, அதில் யூரியா (Urea) மற்றும் துணி துவைக்கும் டிடர்ஜென்ட் ஆகியவற்றைத் தண்ணீருடன் கலந்து பாலின் அளவை இரண்டு மடங்காகப் பெருக்கியுள்ளனர். பின்னர் அதே பாக்கெட்டுகளில் மீண்டும் பேக் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வந்துள்ளனர்.
Undercover raid in Mumbai's Andheri exposes milk adulteration racket: operators mix branded milk with urea & detergent, repackaging to double supply. Amid FSSAI's Dec 2025 crackdown, highlights health risks like kidney damage.
Amritkaal for scamsterspic.twitter.com/SWRAaICPsY
— 𝕲𝖆𝖓𝖊𝖘𝖍 * (@ggganeshh) December 27, 2025
உயிரோடு விளையாடும் இந்த நச்சுப் பாலில் கலக்கப்படும் ரசாயனங்கள், மனிதர்களின் சிறுநீரகத்தைப் (Kidney) பாதிக்கக்கூடிய மிக மோசமான பாதிப்புகளை உண்டாக்கக்கூடியவை. 2025 டிசம்பர் மாதத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை (FSSAI) மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த மோசடி அம்பலமாகியுள்ளது. “அமிர்த காலம்” என்று போற்றப்படும் இந்தக் காலத்தில், சில ஏமாற்றுப் பேர்வழிகள் மக்களின் ஆரோக்கியத்தைச் சிதைத்து கொள்ளையடிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
