அதிமுக பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பிற்கு இடையே வெடித்திருக்கும் உள்கட்சி மோதல் தற்பொழுது தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. சி.வி.சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பினர் அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட ஆதரவு கேட்டு வந்தால், அதற்கு யாரும் கட்டாயமாகக் கையெழுத்துப் போடக் கூடாது என்று ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், ஈபிஎஸ்ஸின் இந்தத் தடையையும் மீறி, எஸ்பி வேலுமணி அதிரடியாகக் களம் இறங்கி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ரகசியமாகக் கையெழுத்து வாங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பேச்சை மீறி எஸ்பி வேலுமணி இவ்வளவு பெரிய ஸ்கெட்ச் போட்டு மெஜாரிட்டியைக் காட்டியிருப்பது அதிமுக வட்டாரத்தை ஒட்டுமொத்தமாக உலுக்கியுள்ளதுடன், சோஷியல் மீடியாவிலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
