மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்து அமைச்சர் கீர்த்தனா முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களைக் கூறி அவதூறு பரப்பி வருவதாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியுள்ளார். கடந்த ஆட்சியில் சுமார் 10.5 லட்சம் கோடி ரூபாய் எடுத்துச் செல்லப்பட்டதாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவர் புழுதி வாரித் தூற்றியுள்ளார் என்றும், இது பொதுமக்களிடையே மாய பிம்பத்தை உருவாக்கப் பார்க்கும் விஷமத்தனம் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியல் உள்நோக்கத்தோடு திட்டமிட்டு அமைச்சர் கீர்த்தனா இவ்வாறு செயல்படுவதாகக் குறிப்பிட்ட தங்கம் தென்னரசு, ஆதாரமில்லாத இந்தக் குற்றச்சாட்டுகள் மூலம் மாநிலத்தின் நிதி நிலைமையை அவர் கொச்சைப்படுத்துவதாகக் குமுறியுள்ளார். இவருடைய இந்த அதிரடிப் பதில் அறிக்கை தற்பொழுது அரசியல் களம் மற்றும் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறி பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
