காலையில் பலரும் விரும்பி உண்ணும் இந்த இடியாப்பம், சில இடங்களில் தரம் குறைவாகத் தயாரிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தடுக்கும் பொருட்டு, விற்பனையாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இடியாப்பம் தயாரிக்க வேண்டும் என்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த உணவுப் பாதுகாப்பு உரிமத்தை விற்பனையாளர்கள் இணையதளம் வாயிலாக இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம்; ஆனால் இதனை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டியது அவசியம். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி காய்ச்சல் அல்லது தொற்று பாதிப்பு உள்ளவர்கள் இடியாப்பம் தயாரிப்பிலோ அல்லது விற்பனையிலோ ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.