மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (CTET) ஹால் டிக்கெட்டுகள் இன்று ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பத்தாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. முதல் ஷிப்ட் காலை 9:30 முதல் மதியம் ஒரு மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 2:30 முதல் 5 மணி வரையிலும் நடைபெற உள்ளது.