உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணங்களில் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த செயலில் பகிரப்படும் ஒவ்வொரு செய்தியும் உலகம் முழுவதும் சில நொடிகளில் மக்களை சென்று சேருகிறது. இந்த நிலையில் தற்போது whatsapp செயலியில் உள்ளது போலவே அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்து கொள்ளும் புதிய வசதி இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் செய்திகளை அனுப்பிய 15 நிமிடங்களுக்குள் அதனை எடிட் செய்து கொள்ளலாம் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.