உலக அளவில் பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான ட்விட்டரை சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்க் வாங்கினார். அதன் பிறகு ட்விட்டர் X என்று மறு பெயரிடப்பட்ட நிலையில் பல புதிய வசதிகளை கொண்டு வந்து பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகின்றார்.

அதன்படி தற்போது பயனர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது இனி X தளத்தில் போஸ்டர்கள் மட்டுமல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளும் வழங்கப்படும். செயலியை அப்டேட் செய்வதன் மூலமாக இந்த வசதியை பெறலாம். தற்போது இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மற்ற பயனர்களுக்கும் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.