உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுவிதமான ரக ஐ போன் மாடல்களை அவ்வபோது அறிமுகம் செய்து வருகின்றது. இந்த ஐபோன்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதனை வாங்குவதற்கு பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தனது பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கிவரும் நிலையில் ஆண்ட்ராய்டு மொபைல்களைப் போல ஐபோனிலும் ப்ளே ஸ்டோர் மூலம் அனைத்து விதை செயலிகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியாது.

ஆனால் ஆப்பிள் ஐபோன்களில் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கக்கூடிய செயலிகளை மட்டுமே பிளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். இந்த நிலையில் ஐரோப்பாவில் அனைத்து நிறுவனங்களுக்கும் சம்பந்தமான போட்டி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஐபோன்களில் ஆப்பிள் ஆப் ஸ்டோருடன் பிற நிறுவனங்களின் ஆப் ஸ்டோர்களையும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஆப்பிள் நிறுவனம் ஐபோன் ஆப் ஸ்டோருடன் பிற நிறுவனங்களையும் வருகின்ற மார்ச் மாதம் முதல் அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஐபோன் பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.