இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் அதிகரித்து விட்டது. அவ்வாறு பயன்படுத்தும் செல்போன்களில் மிகப்பெரிய பிரச்சனையாக ஸ்டோரேஜ் உள்ளது. இந்த பிரச்சனை வருவதற்கு காரணம் நம்முடைய ஃபோன்களில் சேமிப்பிடம் குறைவாக இருப்பது தான். நாம் ஒரு நிறுவனத்தின் செல்போனை வாங்கும்போது அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருக்க வேண்டும் என்றால் அதிக பணத்தை கொடுக்க வேண்டும். இந்த சூழ்நிலையால் பெரும்பாலான மக்கள் விலை குறைவான ஃபோன்களை வாங்குகிறார்கள். அதன் பிறகு ஸ்டோரேஜ் பிரச்சனையை சந்திக்கின்றனர். பல செயல்களை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகின்றது. இதற்கான தீர்வை இந்த பதிவில் பார்க்கலாம்.

நம்முடைய போன்களில் நாம் பயன்படுத்தாத பல செயலிகள் இருக்கும். அதனை நாம் எப்போதாவது ஒருமுறை பயன்படுத்தி விட்டு அப்படியே விட்டு விடுவோம். அவ்வாறான செயலிகள் ஸ்மார்ட் போனின் சேமிப்பு இடத்தை நிரப்பி விடும். இதனால் தேவையில்லாத செயலிகளை அழித்துவிட்டால் தேவையான கோப்புகளை சேமிக்க சேமிப்பிடம் இருக்கும். கேச்சி டேட்டா நம்முடைய செயலிகளில் என்ன பயன்படுத்துகிறோம் என்பதை சேமித்து வைக்கவும். இவை அதிகப்படியான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் எடுத்துக் கொள்ளும்.

எனவே settings பகுதிக்குச் சென்று ஸ்டோரேஜ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தேவையில்லாத பைல்களை நீக்க வேண்டும். ஆண்ட்ராய்டு யூஸர்கள் பைல்ஸ் கேச்சி செயலியை நிறுவி அதன் மூலமாக பைல்களை நீக்கலாம். தேவையில்லாத படங்கள், whatsapp மீம்கள் மற்றும் பாஸ்வோர்ட் வீடியோக்கள் என அழித்து விடுங்கள். மேலும் தேவையற்றவற்றை எக்ஸ்ட்ர்கள் ஹார்ட் டிஸ்க் அல்லது கிளவுட் ஸ்டோரேஜ் இல் சேமிக்கலாம். அதிகமான கோப்புகளை டவுன்லோடு செய்யும் போது ஒரு சில நாட்கள் தான் அவை இருக்கும். அதன் தேவை முடிந்த பிறகு அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதால் பைல்களை கண்காணித்து தேவையில்லாதவற்றை அளிக்க வேண்டும்.