இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி குடியரசு தினத்தை முன்னிட்டு 2999 ரூபாய் வருடாந்திர பிரிபெய்டு பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பேஷன் சில்லறை ரீடெய்லர்கள் மற்றும் ஃபுட் டெலிவரி செயலிகளுக்கான தள்ளுபடிகளை பெற முடியும். அதாவது Swiggy, Ixigo, Ajio, Tira உள்ளிட்ட பிராண்டுகளின் கூடுதல் தள்ளுபடி பெறலாம்.

வாடிக்கையாளர்கள் 2999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும்போது AJio வில் குறைந்தபட்சம் 2499 ரூபாய்க்கு பர்ச்சேஸ் செய்தால் 500 ரூபாய் தள்ளுபடி, tira இல் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பர்ச்சேஸ் செய்யும் போது 30 சதவீதம் தள்ளுபடியும், Ixigo இல் 1500 ரூபாய் தள்ளுபடி, ஸ்விக்கி செயலியில் 299 ரூபாய்க்கு மேல் வாங்கும் போது 125 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் அல்லது 250 ரூபாய் மதிப்புள்ள இரண்டு கூப்பன்கள் கிடைக்கும். இந்த அதிரடி சலுகையை ஜனவரி 31ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம்.