மத்திய , மாநில அரசுகள் பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் அவர்களுடைய திருமணம் செய்து வைப்பதற்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு தொடங்கியுள்ள திட்டத்தின் பெயர் லட்லி லட்சுமி யோஜனா திட்டம் .மத்திய பிரதேச மாநிலத்தில்  இந்த திட்டம் தொடங்கப்பட்டது .இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு பெண் குழந்தையின் பெற்றோர் அம்மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். பெற்றோருக்கு ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.

பெண் குழந்தை 2006 அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். பெற்றோர் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவருடைய மகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயன் கிடைக்கும். சிறையில் இருக்கும் பெண் கைதிகளுக்கு பிறந்த மகள்களுக்கும் இந்த திட்டத்தில் பலன் கிடைக்கும். முதலில் இந்த திட்டத்தில் சேருவதற்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://ladlilaxmi.mp.gov.in/llyhome.aspx என்ற முகவரிக்கு சென்று முகப்பு பக்கத்தில் உள்ள அப்ளை என்ற விருப்பத்தில் புதிய பக்கத்தில் உள்ள வழிகாட்டுதல்களை படித்த பிறகு தொடர வேண்டும்.

அடுத்து விண்ணப்ப படிவம் திரையில் இருக்கும் தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பெண் குழந்தைகளுக்கு முதல் கட்டமாக 6000 தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். இதன் மூலமாக மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் .மகள் ஆறாம் வகுப்பில் சேர்ந்த போன் வங்கி கணக்கில் 2000 வழங்கப்படும் . ஒன்பதாம் வகுப்புக்கு செல்லும்போது 4000 11ஆம் வகுப்பில் சேரும்பொழுது 6000 வழங்கப்படும்.. மகளுக்கு 21 வயது நிறைவடைந்த உடன் ஒரு லட்சம் வழங்கப்படும்