உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புது விதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.

அதன்படி தற்போது பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்காக தனிப்பட்ட தொலைபேசி எண்களை பகிர்வதன் அவசியத்தை நீக்கும் விதமாக புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பயனர்களுக்கு உங்களுடைய whatsapp எண் காட்டப்படாமல் username மட்டுமே வைத்து சேட் செய்யும்படி புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனை விருப்பத்திற்கு தகுந்தார் போல எப்போது வேண்டுமானாலும் மாற்றம் அல்லது நீக்கம் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது