ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு போன் பிரைமா என்ற புதிய போனை அறிமுகம் செய்தது. அந்த போனில் மற்ற ஸ்மார்ட்போன்களை போல வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் யுபிஐ என அனைத்து அம்சங்களும் வழங்கப்பட்டன. இந்த போனுக்கான 75 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் குறித்த விவரத்தை இதில் பார்க்கலாம்.

இந்த 75 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் 23 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்கப்படும் நிலையில் 50 எஸ்எம்எஸ் மற்றும் 2.5 ஜி பி டேட்டா வழங்கப்படும். அதனைப் போலவே வரம்பற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ், டேட்டா ஆகிய நன்மைகளும் இதில் உள்ளது. அடுத்ததாக 91 ரூபாய் திட்டத்தில் மேற்கண்ட அனைத்து அம்சங்களுமே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இதில் எஸ் எம் எஸ் வரம்பு 100 ஆகவும் டேட்டா வரம்பு 100 எம்பி ஆகவும் வழங்கப்பட்டுள்ளது.