இந்தியா ஆயுள் காப்பீட்டு கழகம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஜீவன் உத்சவ் என்ற முழு ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ள நிலையில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் நான் லிங்க் மட்டும் தனிப்பட்ட சேமிப்பில் கவனம் செலுத்துவதாகும். இதில் கூடுதல் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பத்து சதவீதம் கட்டாய உயிர் வாழும் பலன் வழங்கப்படுகின்றது.

மேலும் நிதி பாதுகாப்பு தேவைப்படுவோருக்கு இது போன்ற பல தேவைகள் வழங்குகிறது. அதன்படி பாலிசிதாரர்களுக்கு கடன்களை பெறுவதற்கான நெகிழ்வுத் தன்மையும், முதிர்வு காலத்திற்கு முன்பு பணத்தை திரும்ப பெற அனுமதியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் இரண்டு தனித்துவமான நன்மை விருப்பங்களை வழங்குகின்றது. அதாவது வழக்கமான வருமான பலன் மற்றும் ப்ளெக்ஸ் வருமான பலன் வழங்குவதால் பாலிசிதாரர்கள் தங்களுடைய தேவைக்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.