2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும், குறிப்பாக 200-க்கும் குறையாத இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும் வைகோ நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்த அவர், “பிரதமர் மோடிக்குக் கொத்தடிமையாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி; அப்படிப்பட்ட அவருக்கு இந்த ஆட்சியைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் கிடையாது” என்று ஆவேசமாகப் பேசினார். அதிமுக-வின் கடந்தகால அரசியல் நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் விரோதப் போக்கைக் கடைப்பிடித்தவர்களுக்கு மக்கள் மீண்டும் ஒருமுறை பாடம் புகட்டுவார்கள் என்றும் எச்சரித்தார்
