கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடப்பதாக ஒருபக்கம் சொல்லப்பட்டாலும், உள்ளுக்குள் சலசலப்பு இருப்பதை மாணிக்கம் தாகூரின் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது. “காங்கிரஸ் கட்சியைப் பற்றி அவதூறாகப் பேசிய அந்த திமுக மாவட்டச் செயலாளர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலினுக்கே அவர் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கௌரவம் இருக்கிறது, அதைச் சிதைக்கும் வகையில் பேசுபவர்களைத் தலைமை சும்மா விடக்கூடாது என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தலைமை நியமித்த குழு முறைப்படி கவனித்துக் கொள்ளும் என்றும், இடையில் யாரும் குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்றும் அவர் காட்டமாகப் பேசியுள்ளார்.
