இந்தியாவின் போஜ்புரி மொழி தற்போது கொரியாவிலும் கலக்கத் தொடங்கியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த உள்ளடக்க உருவாக்குநர் யெச்சன் சி லீ, தனது Instagram பக்கத்தில், கொரியக் குழந்தைகளுக்கு போஜ்புரி மொழியை கற்பிக்கிறார் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர், “நமஸ்தே அல்ல, போஜ்புரியில் ‘கா ஹோ’ தான் சொல்வோம்” என்று சொல்லிக் கொடுக்க, குழந்தைகளும் ஆர்வத்துடன் அதை திரும்பவும் திரும்பவும் கூறுகிறார்கள்.
View this post on Instagram
இந்த வீடியோ தற்போது 5 லட்சம் பார்வைகள் மற்றும் 40 ஆயிரம் லைக்குகளை கடந்துள்ள நிலையில், மக்கள் இதைப் பார்த்து சிரிப்பும் ரசிப்பும் கலந்த கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அந்த வீடியோவில், போஜ்புரியில் “நீங்கள் எப்படி இருக்கீங்க?” என்ற கேள்விக்குப் பதிலாக ‘கா ஹால் பா?’ என்று கேட்போம், அதற்கு ‘தீக் பா’ என்று பதில் சொல்வோம்” என கூறும் வகையில், சிறுவர்களுக்கு பாசத்துடன் கற்றுக் கொடுக்கிறார்.
இந்த வீடியோ வைரலானதுடன், பலரும் யெச்சனின் இந்த முயற்சியை பாராட்டி, “இரு நாடுகளுக்கிடையிலான கலாச்சார பாலமாக இருக்கிறது”, “இந்த குழந்தைகளின் ஆர்வமும் அப்பாவித்தனமும் அற்புதம்” எனக் கருத்து தெரிவித்துள்ளனர். யெச்சன் கூறியதாவது: “இந்தியா என் இருதயத்தில் இடம் பிடித்துவிட்டது. போஜ்புரி எனக்கு பிடித்த மொழி, அதை என் நாட்டுப் பசங்க கற்கின்றது என் வாழ்நாள் சிறந்த தருணம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ இந்திய – கொரியா நட்பை பிரதிபலிக்கக்கூடிய ஒரு இனிமையான சம்பவமாகவும், மொழி, கலாச்சாரங்களைச் சேர்த்துப் பேசக்கூடிய அழகான முயற்சியாகவும் பாராட்டப்படுகிறது.
