வாழைப்பழம் ஒரு சத்தான பழம், இதில் பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மற்ற பழங்களை விட வாழைப்பழத்தை குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். அதேபோன்று வயதானவர்களும் இந்த வாழைப்பழத்தை அதிகமாக விரும்பி உண்ணுவது உண்டு. இந்நிலையில் காட்டு வாழைப்பழத்தை குறித்து ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Simon & Tina | Fruit & Vegan Travel (@fitshortie)

அதாவது அந்த வீடியோவில் ஒருவர் காட்டு வாழைப்பழம் எப்படி உள்ளது என்பதை காட்டுகிறார். அந்த வாழைப்பழம் இயல்பான வாழைப்பழத்தை போல் இல்லாமல் மிகவும் சிறிதாக உள்ளது. ஆனால் அந்த வாழைப்பழத்தின் விதைகள் மிகவும் பெரிதாக உள்ளது. இயல்பாக நாம் உண்ணும் வாழைப்பழத்தில் கடுகு அளவில் தான் விதைகள் இருக்கும். ஆனால் இந்த காட்டு வாழைப்பழத்தில் மிகவும் பெரிய அளவில் அதாவது நெல்லிக்காயின் விதை அளவில் விதைகள் இருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.