நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், தமக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலாளரிடம் கேள்வி எழுப்பிய உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாதாந்திர சம்பளம் கைக்கு வந்தவுடன், பி.எப் போக தமக்கு தோராயமாக 75,000 ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அந்தப் பெண் ஊழியருக்கு வெறும் 69,000 ரூபாயே வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மேலாளரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார்.
அதற்கு மேலாளர், தாங்கள் முன் அனுமதியின்றி இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்ததே சம்பளக் குறைப்புக்குக் காரணம் என்று பதிலளித்துள்ளார்.
இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த பெண் ஊழியர், “அந்த இரண்டு நாட்களும் அவசரக் கால சூழல் என்பதால் காலையிலேயே தகவல் தெரிவித்துவிட்டேன்” என்று விளக்கமளித்துள்ளார்.
ஆனால், அதற்குச் சற்றும் சளைக்காமல் மேலாளர், “எந்தவொரு விடுப்பாக இருந்தாலும் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும்” என்று விசித்திரமான நிபந்தனையைக் கூறியுள்ளார்.
🚨 GIRL : I got the salary today, and I was expecting somewhere around Rs 75,000 after PF deduction and all but I got 69 instead.
MANAGER : You also took 2 unapproved leaves.
GIRL : I informed you both mornings, and they were emergencies.
MANAGER : You need to inform at least,… pic.twitter.com/3bdoKBlsAQ
— News Algebra (@NewsAlgebraIND) July 25, 2026
“>
“அவசரக் காலத்தை எப்படி இரண்டு வாரங்களுக்கு முன்பே திட்டமிட முடியும்?” என்று அந்தப் பெண் கேள்வி எழுப்பியதற்கு, நிறுவனத்திற்கும் அவசரச் சூழல் ஏற்பட்டது என்று கூறிய மேலாளர், மேலும் விவாதிக்காமல் மனிதவள மேம்பாட்டுத் துறைக்குச் செல்லுமாறு கூறித் தட்டிக்கழித்துள்ளார்.
அலுவலகத்தில் மேலாளர்களின் இது போன்ற எதேச்சதிகாரப் போக்கு இணையவாதிகளிடையே கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
