இன்றைய காலகட்டத்தில் கேன்சர் நோய் என்பது பரவலாக வயது வரம்புன்றி வருகிறது. ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் இருக்கும் ஆண் மற்றும் பெண் இருவருக்குமே கேன்சர் நோய் வருகிறது. இந்த நோயினை ஆரம்ப காலத்தில் கண்டறிந்தால் மட்டுமே உரிய சிகிச்சை பெற்று உயிர் பிழைக்க முடியும். ஒருவேளை காலதாமதம் ஆனால் ‌ புற்றுநோயை குணப்படுத்துவது கடினம். உயிர் போகும் நிலை கூட ஏற்படலாம். இந்நிலையில் கேன்சர் நோய் தொடர்பாக தற்போது ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதாவது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ICMR கேன்சர் தொடர்பாக ஒரு ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வினை இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் நடத்தியது. அந்த ஆய்வில் 2022 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் புற்றுநோய் பாதிப்பும் அதனால் ஏற்படும் விளைவுகளும் அதிக அளவில் இருக்கும் என்றும் குறிப்பாக இந்தியாவில் தான் இந்த பாதிப்பும் பெருமளவில் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.‌ இந்த புற்றுநோய் பாதிப்பினால் இந்தியாவில் மரணங்கள் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்றவைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.