இந்தியா – பாகிஸ்தான் எல்லையான வாகா-அட்டாரி எல்லையில் தினமும் மாலை நடைபெறும் ‘பீட்டிங் ரீட்ரீட்’ அணிவகுப்பு உலகப்புகழ் பெற்றது. தேசபக்தி ததும்ப நடைபெறும் இந்த அணிவகுப்பின் போது, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் ஒருவருக்கும், பாகிஸ்தான் ரேஞ்சர் ஒருவருக்கும் இடையே நடந்த கலகலப்பான மோதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், பாகிஸ்தான் வீரர் ஒருவர் மிகவும் ஆக்ரோஷமாக காற்றில் குதித்து தனது வீரத்தைக் காட்ட முயல்கிறார். இதைப் பார்த்த இந்திய வீரர், சற்றும் சளைக்காமல் அவரை நக்கல் செய்யும் வகையில் கைகளை அசைத்து சைகை காட்டுகிறார்.

அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் வீரர் குதிப்பதைப் போலவே தானும் குதித்து அவரை வாரிச் சுருட்டுவது போல கலாய்த்ததோடு, தனது உடல் வலிமையைக் காட்டும் வகையில் கைகளைத் தூக்கிக் காட்டி ‘மாஸ்’ செய்துள்ளார்.

பின்னணியில் அதிரடியான இசை ஒலிக்க, இந்திய வீரரின் இந்த துணிச்சலான மற்றும் வேடிக்கையான செயல் அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள், “எங்க ஆளுங்ககிட்டயேவா? இந்திய வீரர்களின் கெத்தே தனி தான்” எனப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.